பொது

சமூக ஊடக தளங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்

02/07/2024 08:14 PM

புத்ராஜெயா, 2 ஜூலை (பெர்னாமா) -- உள்ளடக்கங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, சமூக ஊடக தளங்களின் சமூக வழிகாட்டிகள் குறித்த புரிதல் அதிகரிக்கப்பட வேண்டும்.

வழிகாட்டிகளை மீறும் வரையில், சமூக ஊடகத் தள பயனர்களுக்கு, சமூக வழிகாட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததே, பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவதாக 
டிக்டோக் மலேசியாவின் பொது கொள்கைத் தலைவர், அனுவார் ஃபரிஸ் ஃபட்சில் கூறினார்.

வழிகாட்டிகளை மீறிய, போதைப்பொருள், ஆபாச படங்கள் அல்லது மனதிற்கு தீங்கு விளைவிக்கும் விவகாரங்கள் போன்றவை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்கப்பட் பிறகு அகற்றப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில், புத்ராஜெயாவில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான சமூக ஊடக கருத்தரங்கில் சந்தித்தபோது அனுவார் ஃபரிஸ் அவ்வாறு கூறினார்.

டிக்டொக் சமூக ஊடகம், மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய,  அரசாங்க நிறுவனங்களின் சமூக ஊடகக் குழுவினருக்கு வழிகாட்டிகள் தொடர்பான  விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்களின் சமூக ஊடக தளத்தின் முக்கிய பங்கு, டிக்டொக் சமூக தளப் பயனர்களை அங்கு ஈர்ப்பதோடு, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பில் வழிநடத்துவது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)