விளையாட்டு

2024 யூரோ: டென்மார்க்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

30/06/2024 07:59 PM

டோர்ட்மண்ட், 30 ஜூன் (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள், இன்று அதிகாலை தொடங்கின.

அதில், உபசரனை நாடான ஜெர்மனி 2-0 எனும் கோல்களில் டென்மார்க்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

சவால் நிறைந்த இந்த ஆட்டத்தில் இரு தரப்பின் ஆட்டக்காரர்கள் நால்வருக்கு மஞ்சள் அட்டைகள் வழங்கப்படன.

முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி முடிந்த வேளையில், இடியுடன் கூடிய மழை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஜெர்மனியின் இரு கோல்கள் இரண்டாம் பாதியின் 53 மற்றும் 68-வது நிமிடங்களில் அடிக்கப்பட்டன.

காலிறுதியில், ஜெர்மனி ஸ்பெயின் அல்லது ஜோர்ஜ்யாவுடன் களம் காணும்.

மற்றுமொரு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து 2-0 எனும் இத்தாலியைத் தோற்கடித்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)