பொது

போலீஸ் வேலைக்கு ஆட்சேர்ப்பா? சமூக ஊடக விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்

05/07/2024 07:41 PM

கோலாலம்பூர், 05 ஜூலை (பெர்னாமா) -- பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்படும் போலீஸ் வேலைக்கு ஆட்சேர்ப்பது குறித்த  போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று தேசிய போலிஸ் படை பிடிஆர்எம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதாரமற்ற இத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் புறக்கணிப்பதோடு அதை மற்றவருக்கு பகிராமல் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக இவ்வகை விளம்பரங்கள் டிக் டோக் செயலியில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் பிடிஆர்எம் சுட்டிக்காட்டியது.

இதுவரை 96.000-க்கும் மேற்பட்டவர்கள் இக்காணொளியைக் கண்டுள்ளதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.

அப்பதிவை வெளியிட்ட இணையத்தளம் குறித்து ஆராய்கையில் அதுவும் போலித்தனமானது என்பது தெரியவந்தது.

அரசாங்கம் உள்ளிட்ட பொதுசேவைத்துறையிலான வேலை வாய்ப்புகளை அரசாங்க தொடர்புடைய சமூக ஊடகங்களில் கண்டு உறுதி செய்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுவே போலீஸ் வேலை குறித்த விளம்பரம் என்றால்  ‘Unit Pengambilan Polis Diraja Malaysia’  என்ற பதிவின் மூலமாக முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் வழி தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

பிடிஆர்எம் ஆட்சேர்ப்பு பிரிவு அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் ‘Unit Pengambilan Polis Diraja Malaysia’ என்ற பெயரில் போலீஸ் ஆட்சேர்ப்பு விளம்பரங்களை மட்டுமே வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)