பொது

உலகின் 10ஆவது அமைதியான நாடாக இடம்பெற மலேசியா இலக்கு

06/07/2024 06:12 PM

புத்ராஜெயா, 06 ஜூலை (பெர்னாமா) --அடுத்த ஆண்டு உலக அமைதிக் குறியீடு GPI-இல் உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்றாக 10ஆவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள மலேசியா இலக்கு வைத்துள்ளது.

அந்நிய முதலீட்டாளர்கள் மலேசியா வருவதற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அந்த நிலையைத் தக்கவைப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் அமைச்சு ஆய்வு செய்யும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், உலக அமைதிக் குறியீட்டின், செயல்திறன் வளர்ச்சிக்கு பல தரப்பினர் பங்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டு GPI குறியீட்டில், உலகின் அமைதியான நாடுகளில் மலேசியா ஒன்பது இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளதாக, கடந்த ஜூன் 15-ஆம் தேதி தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)