பொது

போதைப் பித்தர்களுக்கான சிகிச்சை சட்டத்தை திருத்தம் செய்ய கலந்துரையாடல்

18/07/2024 05:02 PM

கோலாலம்பூர், 18 ஜூலை (பெர்னாமா) -- 1983-ஆம் ஆண்டு போதைப் பித்தர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முயற்சியில், அதி சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் உள்துறை அமைச்சு தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு மட்டும், 13 கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் 2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரையில் பல்வேறு சந்திப்புகளையும் உள்துறை அமைச்சு நடத்தியதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு திருத்தம் செய்வதற்காக, கடந்த ஜூலை 9-ஆம் தேதி இரண்டாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட போதைப் பித்தர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இச்சட்ட திருத்தம் குறித்த விரிவான பரிசீலனைக்காக அது சுகாதார சிறப்பு தேர்வு செயற்குழு மற்றும் பாதுகாப்பு சிறப்பு தேர்வு செயற்குழுவின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]