பொது

சுல்ஃபர்ஹான் கொலை போன்று மீண்டும் நிகழாது என்று அமைச்சு நம்பிக்கை 

28/07/2024 06:33 PM

கோம்பாக், 28 ஜூலை (பெர்னாமா) -- கடற்படை அதிகாரி சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயின் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம் உறுதி செய்யும் என்று தற்காப்பு அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.

அப்பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை தமது அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லை என்றாலும் நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக இராணுவ மற்றும் பொதுப் பட்டதாரிகளை உருவாக்கும் பொறுப்பை யூ.பி.என்.எம் கொண்டிருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலெட் நோர்டின் தெரிவித்தார்.

கோம்பாக் தொகுதி அம்னோ பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலெட் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், கடற்படை அதிகாரியான சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயினை கொலைச் செய்ததற்காக, யூ.பி.என்.எம்-இன் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு சாகும் வரை தூக்கிலிடும் தண்டனையை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]