விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி; விளையாட்டாளர்கள் பாரிசை நோக்கி படையெடுப்பு

19/07/2024 07:05 PM

பாரிஸ், 19 ஜூலை (பெர்னாமா) -- ஜூலை 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு உலக நாடுகளில் இருந்து பல விளையாட்டாளர்கள் பாரிசைப் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக தங்கும் விடுதிகளில் சுமார் 14 ஆயிரம் விளையாட்டாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SEINE-SAINT-DENIS எனும் மாவட்டத்தில் உள்ள 52 ஹெக்டர் நிலப்பரப்பில் 82 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

விளையாட்டாளர்கள் மட்டுமின்றி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அந்த தங்கும் விடுதிகளில் தங்கவுள்ளனர்.

பல்வேறு வசதிகளுடன் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளின் போக்குவரத்துக்கு மின்சார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

பாரிஸ் சுற்று வட்டாரத்தில் SAINT-DENIS மிகவும் ஏழ்மையான பகுதி என்றாலும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு அப்பகுதி அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தவுடன் விளையாட்டாளர்களின் தங்கும் விடுதிகள், குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படவுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)