பொது

நேர்மையோடு ஆட்சி செய்து மக்களைச் சமமாக வழிநடத்துவதாக மாமன்னர் உறுதி

20/07/2024 05:14 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- இன்று அரியணை அமர்ந்திருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய பொறுப்பை, நேர்மையாகவும் நியாமான முறையிலும் நிறைவேற்றுவதோடு அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்தவும் உறுதியளித்திருக்கின்றார்.

நாட்டின் நல்வாழ்வையும் இறையாண்மையையும் பேணுவதற்கு, அது மிகவும் அவசியம் என்றும் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அழைப்பை ஏற்று இன்றைய விழாவிற்கு வருகையளித்த புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் பஹ்ரைன் மன்னர், ஷேக் ஹமாட் பின் இசா அல் கலீஃபா ஆகியோருக்குத் தமது நன்றியையும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும் நாட்டை மென்மேலும் வளமான நாடாக முன்னேற்ற அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

வரலாற்றுப்பூர்வ இந்த விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த அனைத்து தரப்பினருக்கும் மாமன்னர் பாராட்டுகளைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)