விளையாட்டு

2024 ஒலிம்பிக் ஏற்பாடுகள் தீவிரமடைந்தன

21/07/2024 04:08 PM

பாரிஸ், 21 ஜூலை (பெர்னாமா) -- 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்காக, அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு I-O-C முன்னதாக பிரான்ஸ் தலைநகரை வந்தடைதுள்ளது.

பாதுகாப்புப் படைகள் ரிவர் செயின் பகுதியை வந்து சேர்ந்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள் ஒன்றான ஒலிம்பிக் போட்டி, வரும் 26-ஆம் தேதி பாரிசில் தொடங்குகிறது.

206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

அப்போட்டியை முன்னிட்டு, செயின் நதிக்கரையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

3 லட்சம் பேர் காணக்கூடிய இந்நிகழ்ச்சியில், 100 படகுகள் மூலம் விளையாட்டு வீரர்களும் கலைஞர்களும் SEINE ஆற்றின் 6 கிலோமீட்டர் பாதையில் பயணிக்க விருக்கும் வேளையில், அந்த 4 மணி நேர தொடக்க விழாவின் தயார்நிலைப் பணிகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா விளையாட்டு அரங்கிற்கு வெளியே நடப்பது இதுவே முதன் முறையாகும்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)