பொது

மலேசியா - சிங்கப்பூர்: QR முறையினால் காத்திருப்பு காலம் 80% குறைந்தது

22/07/2024 04:37 PM

புத்ராஜெயா, 22 ஜூலை (பெர்னாமா) -- மலேசியா-சிங்கப்பூர் நுழைவாயிலில் QR முறை அமல்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து காத்திருக்கும் காலம் முன்பை விட 80 விழுக்காடு குறைந்துள்ளது.

ஜூன் முதலாம் தேதி தொடங்கி அமலில் இருக்கும் QR முறைக்கு மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

"நேரத்தைச் சரிபார்க்க நாங்கள் இந்த பரிசோதனையைச் செய்கிறோம். உதாரணமாக சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்திற்குப் பேருந்தில் வந்தடைந்த பிறகு குடிநுழைவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்போது இந்த புதிய அமைப்பான QR-யைப் பயன்படுத்தும் போது சில வினாடிகள் மட்டுமே ஆகும். உச்ச நேரங்களில் 120 நிமிடங்கள் வரை நீண்ட நேரம் வரை காத்திருக்க வேண்டும். தற்போது அது 70-80% குறைந்துள்ளது", என்றார் அவர்.

ஜூலை 18-ஆம் தேதி வரை, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் நுழைவாயில் வழியாக பேருந்தியில் பயணித்த சுமார் ஒரு லட்சத்து 97,901 QR முறையைப் பயன்படுத்தியிருப்பதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் தெரிவித்தார்.

இதனிடையே, சுல்தான் அபு பகார் வளாகத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூன்று லட்சத்து 11,130 பேர் QR முறையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து மலேசியா-சிங்கப்பூர் நுழைவாயில்களில் நெரிசலைக் குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சைஃபுடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)