பொது

126 கூட்டுறவுக் கழகங்களுக்கு 57 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது

03/08/2024 06:21 PM

பெனாம்பாங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இவ்வாண்டு ஜூலை 15-ஆம் தேதி வரையில், நாடு முழுவதிலும் உள்ள நூற்று இருபத்து ஆறு கூட்டுறவுக் கழகங்களின் மேம்பாட்டிற்காக, ஐம்பத்து ஏழு லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு, மலேசிய கூட்டுறவு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அக்கூட்டுறவுக் கழகங்களின் உபகரணச் செலவு உட்பட வணிக நடவடிக்கைகளின் செலவுகளுக்காகவும், மலேசிய கூட்டுறவு ஆணையம் அந்த ஒதுக்கீட்டை அங்கீகரித்ததாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின், அமைச்சர்  டத்தோ இவோன் பெனெடிக் தெரிவித்தார்.

தேசிய கூட்டுறவுக் கழக தினத்தை முன்னிட்டு, இன்று, சபா மாநில அளவிலான கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுபோது அவர் அவ்வாறு கூறினார்.

அதேக் காலக்கட்டத்தில், பத்து கூட்டுறவுக் கழகங்களின் பயன்பாட்டிற்காக சபா மாநிலத்திற்கு பத்து லட்சத்து எழுபது ரிங்கிட் நிதியை மலேசிய கூட்டுறவு ஆணையம் வழங்கியதாக இவோன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)