விளையாட்டு

நீச்சல் போட்டியில் லியோன் நான்காம் தங்கத்தை வென்றார்

03/08/2024 06:53 PM

பாரிஸ், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பிரான்சின், லியோன் மெர்சென்ட் தமது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லி போட்டியில் ஒரு நிமிடம் 54.06 விநாடிகளில் சாதனைப் படைத்து மெர்சென்ட் வெற்றி பெற்றார்.

முன்னதாக, 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ்  ஒரு நிமிடம் 54.23 வினாடிகளில் சாதனை படைத்திருந்தார்.

இதனிடையே, பிரிட்டனைச் சேர்ந்த SCOTT DUNCAN ஒரு நிமிடம் 55.31 வினாடிகளில் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்று வெள்ளி பதக்கத்தையும், சீனாவைச் சேர்ந்த SHUN WANG ஒரு நிமிடம் 56 வினாடிகளில் மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

200 மீட்டர் BUTTERFLY, 200 மீட்டர் BREASTSTROKE மற்றும் 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவு ஆகியவற்றிலும் 22 வயதுடைய மெர்சென்ட் தங்கம் வென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)