விளையாட்டு

இறுதி ஆட்டத்தில் கார்லசை சந்திக்கவிருக்கிறார் ஜோகோவிட்ச்

03/08/2024 06:55 PM

பாரிஸ், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிட்ச், 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தின் ஸ்பெயினின் கார்லஸ் அல்காராசை சந்திக்கவிருக்கின்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் லோரென்சோ முசேத்தியை 6-4, 6-2, என்ற புள்ளி கணக்கில் ஜோக்கோவிட்ச் தோற்கடித்தார்,

இதனிடையே, அல்காராஸ் நேரடி செட்களில் 6-1, 6-1 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் - அலியாசிமை வீழ்த்தினார்.

24 கிரான் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஜோக்கோவிட்ச், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒற்றையர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இலக்காக கொண்டு, நான்கு கிரான் ஸ்லாம் பட்டங்களை வென்ற அல்காராசை சந்திக்கின்றார்.

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஜோக்கோவிட்ச் வெண்கல பதக்கம் வென்றிருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502