பொது

வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும்

22/07/2024 05:02 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் மலேசியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும்.

அண்மைய நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட கண்காணிப்புக்குப் பிறகு, அங்குள்ள மலேசியர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"அவர்கள் (மாணவர்கள்) அரசு உதவி பெற்றாலும், கிடைக்காவிட்டாலும் நம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நாங்கள் உதவுவோம். இதுவரை பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முதல் சில நாட்களில் நிலைமை கட்டுக்குள் வரலாம் என்று தோன்றினாலும், ஆனால் தற்போது அவர்களை (மாணவர்களை) நாட்டிற்குள் அழைத்து வருவதே சிறந்தது என்று தூதரகத்தின் தகவல்கள் கூறுகின்றன", என்றார் அவர்.

2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பொது சேவை துறைக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறைக்கு வங்காளதேச நீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கியதால் கடந்த ஜூலை முதலாம் தேதி தொடங்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)