பொது

கசிவைத் தடுத்து செயல்திறனை உயர்த்துவீர் - எல்.எச்.டி.என் ஊழியர்களுக்கு வலியுறுத்து

22/07/2024 05:30 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) --  நாட்டின் வரி வருமானத்தில் கசிவைத் தடுக்கும் பொருட்டு செயல்திறனை மேம்படுத்தி ஊழல் நடைமுறைகளைத் துடைத்தொழிக்கும்படி உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என்-னுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் ஊழியர்களை உட்படுத்திய ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை அவ்வாரியம் உறுதி செய்வதோடு அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு தேசிய வரி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, தங்களின் கடமையை முறையாகச் செய்யும் அனைத்து எல்.எச்.டி.என் ஊழியர்களுக்கும் தமது முழு ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்த பிரதமர், இவ்வாண்டிற்கான வரி வசூலிப்பு நிர்ணயித்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)