உலகம்

இந்தியா: வங்காளதேசத்தில் ஏற்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 4,500 மாணவர்களை வெளியேற்றியது

22/07/2024 08:37 PM

புதுடெல்லி, 22 ஜூலை (பெர்னாமா) -- டாக்காவில் ஏற்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து வங்காளதேசத்திலிருந்து 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களை, இந்தியா வெளியேற்றியதாக வெளியுறவு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

ஏறக்குறைய 4,500 மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதை அவ்வமைச்சு உறுதிப்படுத்தியது.

இந்திய மாணவர்களைத் தவிர்த்து, நேபாளத்தைச் சேர்ந்த 500, பூத்தானைச் சேர்ந்த 38 மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த ஒரு மாணவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வங்காளதேச அரசாங்கத்தின் பொது பதவிகளுக்கான ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான போராட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள், கடந்த வாரத்தில் டாக்கா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறையினால், நிலைமை மேலும் தீவிரமடைந்தது.

வங்காளதேசத்தில் வலுத்துவரும் போராட்டங்களினால் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)