பொது

குறுஞ்செய்தி சேவை வழங்குநர்கள் குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்து

23/07/2024 05:59 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் குறுஞ்செய்தி சேவை வழங்குபவர்கள், அத்தளங்களில் ஏற்படும் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்று கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

பாலியல் தொடர்பான குற்றங்கள், ஆபாசப் படங்கள் பகிர்வது உட்பட இணைய மோசடிகள் குறித்து தொடர்பு அமைச்சுக்கு புகார் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, மலேசிய மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் மட்டும் ஆசிரியர்களுக்கு இச்சமூக வலைத்தளம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதிச் செய்ய அது வலியுறுத்தப்படுவதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

"வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற அதிகமான செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இவை இணையம் வழி செய்திகளைப் பறிமாறிக் கொள்ளும் தளமாக இருக்கின்றது. வாட்ஸ் அப் செயலியின் மூலம் குழந்தைகளிடம் பாலியல் அவதூறுகள் ஏற்படுத்துவதாக எங்களுக்குப் புக்கிட் அமான் டி11 தரப்பிடமிருந்து புகார் கிடைத்துள்ளது. அதோடு, டெலிகிராம் செயலியையும் இதற்கு முன்னதாக ஆபாச காணொளிகளைப் பகிரும் தளமாக பயன்படுத்தி வந்ததாக எங்களுக்குப் புகார் கிடைத்துள்ளது,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற யு-மொபைல்- உடனான இலக்கவியல் பள்ளியின் அறிமுக விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் ஃபஹ்மி அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)