பொது

KUSKOP-இன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிறப்பு தொழில் பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்ய வலியுறுத்து

23/07/2024 08:10 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, KUSKOP-இன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் பட்டதாரி மாணவர்களுக்கென சிறப்பு தொழில் பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

'Bank Rakyat Uniprenuer' 3.0 திட்டம் மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்துள்ளது.

அதன் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்தவுடன் வணிகத் தளத்தில் வாய்ப்பு கிடைப்பதை, தங்கள் தரப்பு உறுதிச் செய்யவிருப்பதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

''யூனிபிரனுயரில் பயன்படுத்தப்படும் உத்திகளானது அவர்களுக்கு மீன்களை வழங்குவதல்ல மாறாக மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதாகும். கைப்பிடித்துச் செல்லும் முயற்சியாகும். எனவே, படிப்படியாக உங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், உங்கள் வணிகத்தை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் வணிகத்தை எவ்வாறு முறையாக நடத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள உதவும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 'Rakyatpreneur' 4.0 மற்றும் 'Bank Rakyat Uniprenuer' 3.0 திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)