பொது

இணையக் குற்றவியல் வழக்கு விசாரணையின் அம்சங்களை பிடிஆர்எம், ஏஜிசி, எம்சிஎம்சி ஒருங்கிணைக்கும்

24/07/2024 06:58 PM

புத்ராஜெயா, ஜூலை 24 (பெர்னாமா) -- இணையம் வழியான குற்றவியல் சம்பவங்களின் விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கான அம்சங்களை வலுப்படுத்தி ஒருங்கிணைக்க அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம், தேசிய சட்டத் துறை ஏஜிசி, மலேசிய தொடர்பு மற்றும்  பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, அவற்றை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும்.

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துவரும் இணைய குற்றவியல் விகிதங்களைக் கட்டுப்படுத்த, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இணைய மோசடி வழியாக மக்களை ஏமாற்றும் தரப்பினர் தவறாக பயன்படுத்தும் ஊடகங்களில் முகநூலும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)