பொது

எம்சிஎம்சியின் METAHRISE திட்டத்திற்கு மலேசிய சாதனைப் புத்தகத்தில் அங்கீகாரம்

30/07/2024 08:06 PM

சைபர் ஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) --  MetaHRise எனப்படும் முதலாவது Multiplayer Metaverse Induction திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தை மலேசிய சாதனைப் புத்தகம், MBOR அங்கீகரித்துள்ளது.

எம்சிஎம்சி ஊழியர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட Connect Hub எனப்படும் மெய்நிகர் கற்றல் சூழலை உள்ளடக்கி, புதிய பணியாளர்களுக்கான உள்கட்டமைப்பு பயணத்தில் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்த புத்தாக்க திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக எம்சிஎம்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இன்று, சைபர் ஜெயாவில் நடைபெற்ற பாராட்டு விழாவின்போது, MBOR தலைமை செயல்பாட்டு அதிகாரி, ஜான் ஹீ, எம்சிஎம்சி தலைவர் டான் ஶ்ரீ முஹமட் சலீம் ஃபாதே டின்-னிடம் அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்.

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது, MetaHRise திட்டம், எம்சிஎம்சி-யின் செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்து ஈர்க்கக்கூடிய அறிமுகத்தை அதிவேக அனுபவங்களின் மூலம் வழங்குகிறது.

Gamification எனப்படும் விளையாட்டு சார்ந்த அம்சங்கள் வழியாக அணி உருவாக்கத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அறிவைச் சோதிப்பது, குழுப்பணியை வளர்ப்பது மற்றும் பணியாளர் ஈடுபாட்டை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல அம்சங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)