பொது

இரண்டாம் வாய்ப்புத் திட்டத்தில் ஒரு லட்சத்து 42,510 திவால் வழக்குகளுக்குத் தீர்வு

25/07/2024 04:55 PM

புத்ராஜெயா, 25 ஜூலை (பெர்னாமா) --  இரண்டாவது வாய்ப்பு திட்டத்தின் வழி ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 510 திவால் வழக்குகளுக்குத் தீர்வு கண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வாழ்க்கையை வழங்க அரசாங்கம் வழிவகுத்துள்ளது.

முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை விடுவிக்கும் இலக்கை மலேசிய திவால் துறை கடந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு, அரசாங்க ஊழியர்கள் குறிப்பாகத் திவால் துறை சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுத்தது. இதன் மூலம் 140 ஆயிரம் குடும்பங்கள் நிம்மதியாகவும் வாழ்க்கையைச் சிறப்பாகவும் எதிர்கொள்ள முடியும்'', என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் மலேசிய திவால் துறையின் 100 ஆண்டுகள் நிறைவு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

வெற்றிகரமாக தீவால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

சிறிய அளவிலான கடனுடன் திவாலானவர்களைச் சில நிபந்தனைகளுடன் விடுவிக்க ஒருமைப்பாட்டு அரசாங்கம் இரண்டாவது வாய்ப்புக் கொள்கையை முன்னெடுத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)