பொது

ஜூலை 29 முதல் MYKID விண்ணப்பம் திறக்கப்படும்

25/07/2024 05:16 PM

புத்ராஜெயா, 25 ஜூலை (பெர்னாமா) --  MYKID எனப்படும் குழந்தைகளுக்கான அடையாள அட்டை பதிவிற்கான விண்ணப்பம் வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் அனைத்து தேசியப் பதிவுத் துறையின் அலுவலகங்களில் திறக்கப்படும்.

MYKID அட்டை தயாரிப்பிற்கான நுண் சில்லுகளின் கையிருப்பில் ஏற்பட்ட பற்றாக்குறைக் காரணமாக அச்செயல்முறை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜெ.பி.என் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னர் MYKID அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தைச் செய்து அதற்கான ரசீது வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.பி.என் அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளவதற்கு முன்னதாக, ஜெ.பி.என்னின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், அது குறித்து பதிவிறக்கும் செய்து சரிபார்த்து கொள்ளுமாறும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 29 தொடங்கி அக்டோபர் 31ஆம் தேதிவரை மூன்று மாதத்திற்கு அதனை பரீசிலிப்பதற்குக் காலவரையறை வழங்கப்பட்டுள்ளது.

அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில், அவர்களின் MYKID அடையாள அட்டை விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் அவர்கள் புதிய விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அது குறித்த மேல்விவரங்களுக்கு 03-88807077 என்ற ஜெ.பி.என் எண்ணிலோ அலல்து pro@jpn.gov.my என்ற அகப்பக்கத்திலோ தொடர்பு கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)