பொது

சமூக ஊடகங்களில் பகிரப்படும் முதலீட்டு சலுகைகளை எளிதில் நம்பிவிடாதீர்

25/07/2024 05:25 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) --  'TOO GOOD TO BE TRUE அல்லது INDAH KHABAR DARIPADA RUPA என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் முதலீட்டு சலுகைகளை எளிதில் நம்பிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

டெலிகிராம் சமூக ஊடகம் வாயிலாக வெளியிடப்படும் முதலீட்டு சலுகைகள் போலியானவை என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமட் யூசோஃப் தெரிவித்தார்.

''நான் பலமுறை வலியுறுத்திவிட்டேன். டெலிகிராமில் பத்து அல்லது நூற்றுக்கணக்கானோர் என்ன பார்க்கிறார்கள் என்று என்னால் பெயரிட முடியும். முதலீட்டு குழுவால் ஈர்க்கப்பட்டு, பின் அனைவரும் ஏமாற்றப்படுகின்றனர். அதோடு நட்டத்தில் முடிவடையும் முதலீடுகளைச் செய்பவர்களும் மிக அதிகம்'', என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் வாராந்திரக் கூட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இணையம் மூலமாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், இதற்கு முன்னர் தலைத்தூக்கியிருந்த பல குற்றச் செயல்கள் தற்போது சமூகவலைத்தளம் மூலமாக ஊடுருவத் தொடங்கியுள்ளதாகவும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)