பொது

கடந்த பத்தாண்டுகளில் பி.டி.ஆர்.எம்-இல் சுமார் 1,671 மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்

25/07/2024 05:33 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- கடந்த 2014 தொடங்கி, இவ்வாண்டு வரைக்குமான இந்தப் பத்தாண்டுகளில், அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-இல் சுமார் 1,671 மூத்த அதிகாரிகளும், கீழ்மட்ட அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே காலக்கட்டத்தில், சுமார் 15, 546 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது, ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக புக்கிட் அமான், நேர்மை மற்றும் தர இணக்கத்துறை, JIPS-இன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்ரி அஹ்மட் கூறினார்.

''இந்தப் பத்தாண்டுகளில், சுமார் 40, 436 ஒழுங்கீன நடவடிக்கைகான விசாரணை அறிக்கை மற்றும் அதேநடவடிக்கைக்கான மேலதில விசாரணை அறிக்கையை புக்கிட் அமான், நேர்மை மற்றும் தர இணக்கத்துறை திறந்துள்ளது,'' என்றார் அவர்.

இன்று, புக்கிட் அமானில் நடைபெற்ற, JIPS-இன் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அஸ்ரி அஹ்மட் அவ்வாறு கூறினார்.

பி.டி.ஆர்.எம் தனது உறுப்பினர்களின் தவறான நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதில், தீவிரத்தன்மையோடு இருக்கும் அதேவேளையில், வெளிப்படையான விசாரணைகள் மூலம் தண்டனைகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)