பொது

கைப்பேசி அழைப்பு மோசடி முன்னாள் அரசாங்கப் பணியாளர் 735,000 ரிங்கிட்டை இழந்தார்

25/07/2024 05:41 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) --  கைப்பேசி அழைப்பு வழியான மோசடியினால் அமோசடி ஒருவர் ஏழு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கினார்.

அறுபத்து ஏழு வயதான அப்பெண்மணி கள்ளப்பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக கூறி விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர் ஒருவர், தொலைபேசி அழைப்பின் வழி இம்மோசடி நடவடிக்கையை மேற்கொண்டதாக தாங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முஹமட் தலிப் தெரிவித்தார்.

விசாரணையின் நோக்கத்திற்காக தமது வங்கி கணக்கில் இருந்த பணத்தைச் சந்தேக நபரால் வழங்கப்பட்ட 10 வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அவர் கூறியதைப் போன்று பணத்தைக் கணக்குகளுக்கு மாற்றிய பின்னரே, தாம் அவ்வாடவரால் ஏமாற்றப் பட்டுள்ளதை அப்பெண்மணி உணர்ந்ததோடு போலீஸ் புகாரும் செய்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)