பொது

கென்யாவிலுள்ள மலேசியர்கள் அதிகாரிகளின் வழிகாட்டியைப் பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

25/07/2024 07:34 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- கென்யாவில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் பகுதிகளில் வசிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருப்பதோடு, அண்மையத் தகவல்களையும் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டையைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அங்குள்ள நிலவரத்தைத் தங்கள் தரப்பு கண்காணித்து வருவதோடு, கென்யாவில் உள்ள பதிவு செய்துள்ள மலேசியர்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு, விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அண்மையத் தகவல்களையும் ஆதரவையும் பெறுவதற்கு தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

''அங்குள்ள சூழ்நிலையில் உதவிகளை வழங்கவும், மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தூதரகம் தயாராக உள்ளது,'' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிக்கு மலேசியர்கள் 611, Runda Grove, Runda, P.O. Box 42286, Nairobi என்ற முகவரியிலோ, +254 (01) 11052710 / +254 741 603952 என்ற எண்ணிலோ அல்லது  mwnairobi@kln.gov.my என்ற மின்னஞ்சல் வழியோ தூதரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.

அந்நாட்டில், கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நீடித்து வரும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 50 பேர் உயிரிழந்த வேளையில், 413 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)