விளையாட்டு

2024 பாரிஸ் ஒலிம்பிக்: தங்கம் வெல்பவருக்குக் கூடுதல் 20 லட்சம் ரிங்கிட்

26/07/2024 05:25 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) --  2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தேசிய விளையாட்டாளர்களுக்கு மேலும் 20 லட்சம் ரிங்கிட் வெகுமதி காத்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அப்போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு அந்த வெகுமதியை வழங்க மேலும் மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, KBS தெரிவித்திருக்கிறது.

யின்சன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் 10 லட்சம் ரிங்கிட்டை வழங்கவுள்ள நிலையில் மேட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனமும், எம்.ஜே ஹெல்த் ஸ்கிரீனிங் சென்டர் நிறுவனமும் தலா ஐந்து லட்சம் ரிங்கிட்டை வெகுமதியாக வழங்கவுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் KBS குறிப்பிட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றால், அந்த வெகுமதி சமமாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று KBS கூறியது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் தேசிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, வெகுமதி வழங்க முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு KBS அமைச்சர் ஹன்னா யோ நன்றி தெரிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)