பொது

குற்றப் பத்திரிகையில் சேன் ராயனின் பெயரை திருத்தும்படி எதிர்தரப்பு விண்ணப்பம்

26/07/2024 06:44 PM

பெட்டாலிங் ஜெயா, 26 ஜூலை (பெர்னாமா) -- சேன் ராயன் அப்துல் மாத்தினின் பெற்றோரிடம் இன்று சமர்ப்பித்த கொலை வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிக்கையில் அச்சிறுவனின் பெயரைத் திருத்தி எழுதும்படி எதிர் தரப்பு விண்ணப்பித்துள்ளது.

சேன் ராயன் அப்துல் மாத்தின் என்ற பெயரை சேன் ராயன் சைம் இக்வான்  என்று திருத்தி எழுதப்பட்டுவிட்டதாக, அச்சிறுவனின் பெற்றோர் சைம் இக்வான் சஹாரி மற்றும் இஸ்மானிரா அப்துல் மானாஃப் தம்பதியினரைப் பிரதிநிதித்து வாதாடும் வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொய்ன், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஷாலிசா வொர்னாவிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஜூன் 13-ஆம் தேதி, அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில், கொலை செய்யப்பட்ட அச்சிறுவனின் பெயர் சேன் ராயன் அப்துல் மாத்தின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், தேசியப் பதிவுத் துறை, JPN-இன் பிறப்பு பதிவு ஆவணத்தில், அத்திருத்தம் செய்யப்பட்டுவிட்டதாக, இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியான இஸ்மானிரா மூலம் தங்கள் தரப்பு பெற்றுவிட்டதாக, வழக்கறிஞர் ஃபஹ்மி கூறினார்.   

இதனிடையே, கடந்த ஜூலை 4-ஆம் தேதியே சேன் ராயன் பின் சைம் இக்வான் என்ற பெயர் திருத்தம் கண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அச்சிறுவனின் புதிய பிறப்பு பத்திரத்தின் நகலையும் அவர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)