பொது

ஏழ்மை மக்கள் வீடமைப்புத் திட்டம், வளமான மக்கள் வீடமைப்புத் திட்டம் என மறுபெயரிடப்பட்டது

26/07/2024 06:51 PM

கோத்தா திங்கி, 26 ஜூலை (பெர்னாமா) -- PPRT எனப்படும் ஏழ்மை மக்கள் வீடமைப்புத் திட்டத்தை, வளமான மக்கள் வீடமைப்புத் திட்டம், PPRS என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு மறுபெயரிட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள சமுதாயத்தின் கண்ணோட்டத்தையும் அவ்வீடமைப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் எண்ணத்தையும் மாற்ற மறுபெயரிடும் நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

முன்னதாக 600 சதுர அடிகளாக இருந்த வீட்டின் அளவை  680 சதுர அடியாக மேம்படுத்துவதும் PPRS வீட்டின் விவரக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ளதாக புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான சாஹிட் ஹமிடி கூறினார்

தாங்கள் வாடகைக்கு வசிக்கும் வீட்டை வாங்குவதற்கான அம்சத்தையும் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இன்று ஜோகூர், கோத்தா திங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அஹ்மட் சாஹிட் அதனைத் தெரிவித்தார்.

2024-ஆண்டில், 3,000 புதிய PPRS வீடுகளைக் கட்டுவதற்காக KKDW 46 கோடியே 4 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியிருப்பதோடு,  தற்போதுள்ள 12,600 வீடுகளை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)