பொது

45 லட்சம் ரிங்கிட் சொகுசு கார்களும் கடத்தல் சிகரெட்டுகளும் பறிமுதல்

26/07/2024 07:01 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) -- அண்மையில், கோலாலம்பூர் மற்றும் பகாங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின் மூலம் நாற்பத்து ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பதினாறு சொகுசு கார்களையும் பனிரெண்டு லட்சம் கடத்தல் சிகரெட்டுகளையும் அரச மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்தது.

கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் பகாங்கில் உள்ள உரிமம் கொண்டிருக்கும் கிடங்கு ஒன்றில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி அந்த அனைத்து சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, சுங்கத் துறையின் மத்திய மண்டல உதவி தலைமை இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூர், கூட்டரசு பிரதேச சுங்கத் துறை கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அதற்கான வரி நான்கு ஆண்டுகளுக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அவ்வாறு செய்யத் தவறிய தரப்பு, உரிமம் பெற்ற கிடங்கில் அவ்வாகனங்களை வைத்திருந்தது தெரிய வந்ததாக நோர்லேலா குறிப்பிட்டார்.

இதனிடையே, பகாங், குவாந்தான், தாமான் ஷாசானில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடத்தல் சிகரெட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கையையும் கடந்த ஜூலை 13-ஆம் தேதி சுங்கத் துறையால் முறியடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)