டாக்டர் சிதி சஹாராவின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது

27/07/2024 06:04 PM

ஷா ஆலம், 27 ஜூலை (பெர்னாமா) -- தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு முன்னாள் அமைச்சர், டான் ஶ்ரீ டாக்டர் சிதி சஹாரா சுலைமான்னின் நல்லுடல் இன்று காலை மணி 11.30 அளவில் ஷா ஆலம், செக்‌ஷன் 21-இல் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

75 வயதான டாக்டர் சிதி சஹாராவின் இறுதி சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு மணி 11.23 அளவில், செர்டாங் மருத்துவமனையில் மூப்பு காரணத்தினால் அவர் இயற்கை எய்தியதாக அவரின் மகன் தெரிவித்தார்.

1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பிறந்த டாக்டர் சிதி சஹாரா, அரசாங்கத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்திருந்தார்.

பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அம்னோ மகளிர் பிரிவு தலைவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)