பொது

கெடாவில் டெங்கியினால் மேலும் ஆறு மரணச் சம்பவங்கள் பதிவு

27/07/2024 06:24 PM

கெடா, 27 ஜூலை (பெர்னாமா) -- கோலா மூடா மாவட்டத்தில் டெங்கியினால் ஆறு மரணச் சம்பவங்கள் உட்பட அம்மாநிலத்தில் மொத்தம் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

டெங்கி காய்ச்சல் அதிகரித்திருப்பதால் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் கவலைத் தெரிவித்துள்ளார்.

கெடாவில் டெங்கி சம்பவங்களின் அதிகரிப்பை மக்கள் சாதாரணமாக கருதிவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு கெடாவில் இரு மரணங்களுடன் 1,461 நோய்ச் சம்பவங்கள் பதிவாகியது.

2023-ஆம் ஆண்டு ஒன்பது இறப்புகளுடன் டெங்கி நோய்ச் சம்பவங்கள் 5,207-ஆக அதிகரித்துள்ளன.

இவ்வாண்டு ஜூலை 20-ஆம் தேதி வரை பதிவான 3,337 டெங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு 3,249 ஆக பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான ஏழு சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக 88 நோய்ச் சம்பவங்களுடன் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)