பொது

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 40,000 க்கும் மேற்பட்ட ஜாலூர் கெமிலாங் விநியோகம் 

28/07/2024 03:40 PM

கோலாலம்பூர், 28 ஜூலை (பெர்னாமா) -- இவ்வாண்டு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் தேசிய தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டங்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், இதுவரை 40,000 க்கும் அதிகமான ஜாலூர் கெமிலாங்கை விநியோகித்துள்ளது.

அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதி மன்றங்கள், மக்கள் நலன் சார்ந்த சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜாலூர் கெமிலாங் விநியோகிக்கப்படும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

கோலாலம்பூரில் வசிப்பவர்களுக்கு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஒற்றுமை உணர்வை அதிகரிக்க, ஜாலூர் ஜெமிலாங்கை பறக்க விடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக டாக்டர் சலிஹா கூறினார்.

“எனவே, கோலாலம்பூரைச் சுற்றியுள்ள மக்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடுகின்றனர்," என்றார் அவர்.

இன்று 2024 தேசிய மாதத்தை முன்னிட்டு, கோலாலம்பூர் அளவிலான ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் பிரச்சாரத்தை டாக்டர் சலிஹா தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோலாலாம்பூரில் உள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜாலூர் கெமிலாங் வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502