விளையாட்டு

தென்கிழக்கு ஆசிய FIGURE SKATING TROPHY போட்டி; வெண்கல பதக்கத்தை வென்றார் ஶ்ரீ அபிராமி

28/07/2024 05:52 PM

மணிலா, 28 ஜூலை (பெர்னாமா) --  நேற்று, பிலிப்பைன்ஸ், மணிலாவில் 2024-ஆம் ஆண்டிற்கான தென்கிழக்கு ஆசிய Figure Skating Trophy போட்டியில் நாட்டின் பனிச்சறுக்குத் தாரகை ஶ்ரீ அபிராமி சந்தரன் மூன்றாவது நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

அப்போட்டியின் Basic Novice பிரிவில் ஆறு நாடுகளைச் சேர்ந்த பதினாங்குப் போட்டியாளர்களுடன் களமிறங்கிய ஶ்ரீ அபிராமி நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்று தந்துள்ளார்.

இவ்வாண்டில், மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொண்ட ஶ்ரீ அபிராமி நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்ததோடு தனக்கென தனி அடையாளத்தையும் கொண்டுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற Skate Bandung Indonesia போட்டியில் அவர் தங்க பதக்கம் வென்றதுடன் சிறந்த போட்டியாளராகவும் தேர்வு பெற்றுள்ளார்.

அதோடு, கடந்த ஜூன் மாதம் பூசான் நகரில் நடைபெற்ற Presiden Cup Figures Skating போட்டியிலும் தங்கம் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

இதனிடையே, 2024-ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய Figure Skating Trophy போட்டியில் தமது வெற்றி குறித்து ஶ்ரீ அபிராமி இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

''2024-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய ஃபிகர் ஸ்கேட்டிங் டிராபியில் எனக்கும் வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்த வெற்றி மலேசிய மக்களுக்கும் நாட்டின் அறுபத்து ஏழாவது சுதந்திர தினத்திற்கும் சமர்பிக்கிறேன்'', என்றார் அவர்.

மேலும் அவர், வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி, தைவானில் நடைபெறவிற்கும் 2024-ஆம் ஆண்டின் Skate Asia  போட்டியிலும், செப்டம்பர் 6-ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெறவிருக்கும் 2024-ஆம் ஆண்டின் Asian Trophy  போட்டியிலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)