பொது

ஐ.நா-வின் உலக பாரம்பரிய தளமாக நியா குகை அங்கீகாரம்

28/07/2024 03:54 PM

சரவாக், 28 ஜூலை (பெர்னாமா) --  சரவாக்கின், தாமான் நெகாரா நியா குகை வளாகம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம், யுனெஸ்கோவின் உலகத் தொல்பொருள் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21 முதல் 31-ஆம் தேதி வரை இந்தியா, புது டெல்லியில் நடைபெறும் 46-வது உலக பாரம்பரியக் குழுவின் செயற்குழு கூட்டத்தின் போது உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் பிரதிநிதி தலைமையிலான உலக பாரம்பரிய செயற்குழுவின் 21 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் அத்தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு தாமான் நெகாரா நியா குகை வளாகத்தை உலக தொல்பொருள் பாரம்பரியத் தளமாக பரிந்துரைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி, அப்பரிந்துரைகளுக்கான பட்டியல் ஆவணங்கள் முறையே யுனெஸ்கோவிற்கு அனுப்பப்பட்டதுடன், 2023-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி, பிரான்ஸ், பாரிசில் உள்ள யுனெஸ்கோ செயலகத்தில் நியமனத்திற்கான ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டன.

"தற்போது மற்றும் வருங்கால சந்ததியினருக்குத் தாமான் நெகாரா நியா குகை வளாகம் உலகளாவிய மதிப்பை ஏற்படுத்துவதை நாங்கள் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறோம்'', என்றார் அவர்.

இந்த அங்கீகாரத்தின் வழி, 2000-ஆம் ஆண்டில் குனோங் முலு தேசிய பூங்கா, தாமான கினாபாலு, 2008-ஆம் ஆண்டில் வரலாற்று நகரமான மலாக்காவும் ஜார்ஜ்டவுனும், 2012-ஆம் ஆண்டில் லெம்பா லெங்கோங்  தொல்பொருள் பாரம்பரியத் தளம் உட்பட ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைப் பட்டியலிடுவதில் மலேசியா வெற்றி கண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)