விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி: இரு தங்கப் பதக்கங்களை வென்றது சீனா

28/07/2024 06:10 PM

பாரிஸ், 28 ஜூலை (பெர்னாமா) --  2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று இரு தங்கப் பதக்கங்களை வென்று, சீனா தனது தங்க வேட்டையைத் தொடங்கியுள்ளது.

10 மீட்டர் குறி சுடும் போட்டியில், கலப்பு இரட்டையரான ஹுவாங் யுதிங் - ஷெங் லிஹாவ் ஜோடி சீனாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

தென் கொரிய வீரர்களுடன் மோதிய சீன விளையாட்டாளர்கள், 16-12 என்ற புள்ளிகளில் வென்றனர்.

இதனிடையே, ஜெர்மனி விளையாட்டாளர்களைத் தோற்கடித்து கசாகஸ்தான் வெண்கலம் வென்றது.

மகளிர் முக்குளிப்பு போட்டியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தியது.

மூன்று மீட்டர் பிரிவில், அந்நாட்டின் சாங் யானி - சென் யிவென் ஜோடி, 337.68 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்ற நிலையில், 314.64 புள்ளிகளுடன் அமெரிக்க வெள்ளி வென்றது.

302.28 புள்ளிகள் பெற்று பிரிட்டன் வெண்கலத்தைத் தட்டிச் சென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)