பொது

அதிகரிக்கும் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள்

28/07/2024 04:07 PM

கோலாலம்பூர், 28 ஜூலை (பெர்னாமா) --  இவ்வாண்டு ஜூலை 14-யில் இருந்து ஜூலை 20-ஆம் தேதி வரை நாட்டில் முண்ணூற்று பதினேழு புதிய டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகிய நிலையில், அதனால் நான்கு மரண சம்பவங்களும் பதிவாகின.

இருபத்து எட்டாவது தொற்றுநோயியல் வாரத்தில் இராயிரத்து முண்ணூற்று எழுபத்து மூன்று நோய்ச் சம்பவங்களாக இருந்த வேளையில், இருபத்து ஒன்பதாவது வாரத்தில் அந்த எண்ணிக்கை இராயிரத்து அறநூற்று தொன்னூறாக அதிகரித்ததோடு உயிரிழப்புகளும் அறுபத்து ஒன்பதாக பதிவாகின.

கடந்த வாரம் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகம் பரவும் இடங்கள் நூறாக பதிவாகியதாகவும் இவ்வாரம் அந்த எண்ணிக்கை சற்று குறைந்து தொண்ணூற்று நான்காக பதிவாகியதாகவும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி அபு அசான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதேவேளையில், இவ்வாரம் நான்கு சிக்குன்குனியா நோய்ச் சம்பவங்கள் பதிவாகிய வேளையில் அதன் மொத்த எண்ணிக்கை ஐம்பத்து எட்டாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஒவ்வொரு வீடமைப்பு பகுதியிலும் அனைவரும் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறும் ONE HOUR MALAYSIA CLEAN UP எனும் நடவடிக்கையை மாதத்திற்கு ஒருமுறை செய்யுமாறும் டாக்டர் முஹமட் ரட்ஸிவலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)