பொது

உதவித் தொகை கிடைத்த பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படாததை உறுதிசெய்ய அரசாங்கம் முயற்சி

28/07/2024 06:05 PM

சபா, 28 ஜூலை (பெர்னாமா) --  சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உதவித் தொகை கிடைத்த கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடும் வகையில் பொதுமக்களைக் கொண்ட ஓர் இயக்கத்தை உருவாக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

இதில், உதவித் தொகை வழங்கப்பட்ட டீசல் மற்றும் ரோன்95 பெட்ரோல் ஆகிய கட்டுப்பாட்டு பொருள்கள் இலக்கிடப்பட்ட தரப்பினரால் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

முதலில் தீபகற்ப மலேசியாவில் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு வரும் டீசலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படவிருப்பதாக டத்தோ அர்மிசான் கூறினார்.

பல்வேறு காரணங்களுக்காக டீசலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டம் சபா, சரவாக் மற்றும் லபுவானில் அமல்படுத்தப்படவில்லை.

''இறுதியில், இந்த உதவித் தொகை பொது மக்களே பெறுகின்றனர். இதில் ஏற்படும் கசிவு மக்கள் உதவித் தொகையை மறுக்கிறது'', என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை, கினாபாதாங்கானில் உள்ள புக்கிட் காராம் பெட்ரோனாஸ் நிலையத்தைத் தொடக்கி வைத்த பின்னர், அர்மிசான் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)