பொது

நாட்டில் இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் - பிரதமர்

29/07/2024 03:34 PM

ஈப்போ, 29 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில், இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதனால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவதோடு இஸ்லாமிய மதம் குறித்த அச்சம், 'இஸ்லாமொபோபியா' தொடர்பிலான சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மேற்கத்திய காலனித்துவக் கொள்கை இன்னும் சிலரின் சிந்தனையில் உள்ளதால் , இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல் முரண்பாடான கருத்துகள் மற்றும் அம்மதத்தின் நிராகரிப்புக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''மலேசியாவில் பலதரப்பட்ட மதங்கள் போன்ற சமூகத்தில் எப்படி வாழத் துணிகிறீர்கள். மற்ற மதங்கள், பிற கலாச்சாரங்கள், பிற நாகரிகங்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, பின்னர் மேற்கத்தியர்கள் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறோம். எனவே மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளவும், அவர்களை நாம் புரிந்துகொள்ளவும் நமக்குத் தேவையான ஈடுபாடு இது என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.

இன்று, ஈப்போவில் நடைபெற்ற ஏழாவது இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகம் குறித்த உலக மாநாட்டில் ‘Together We Stand: Muslims And Global Humanity’ எனும் தலைப்பில் உரையாற்றியப் பிரதமர் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அம்மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)