உலகம்

வட கலிபோர்னியாவில் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராட்டம்

29/07/2024 05:08 PM

வட கலிபோர்னியா, 29 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை முதல், வட கலிபோர்னியாவில் மோசமடைந்து வரும் காட்டுத்தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

24 மணிநேரத்தில் காட்டுத்தீ இரண்டு மடங்காக அதிகரித்த வேளையில், தற்போது அமெரிக்காவில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட காட்டுத்தீயில் மிக மோசமானதான கருதப்படுகிறது.

சேக்ரமென்டோ நகருக்கு வடக்கே சுமார் 90 மைல்கல் தூரத்தில் உள்ள 350,000 ஏக்கர் நிலம் இத்தீயினால் சேதமடைந்ததாக கலிபோரினிய வனவியல் மற்றும் தீ பாதுகாப்பு துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், 130-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் சேதமடைந்ததோடு, அங்கு இடமாற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு அருகிலுள்ள சில மாவடங்களில் வசிப்பவர்களுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10 விழுக்காட்டு தீ மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்த மாவட்டத்தில் உள்ள குளிரான வானிலையும் ஈரப்பதமான காற்றும், தீ பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

தீப்பிடித்து, எரிந்து கொண்டிருந்த காரை வறண்ட பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தீயை மூட்டியதாக, சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)