பொது

சமூக ஊடக தளங்களின் உரிமத்தில் கவனம் செலுத்துவது குறித்து கலந்துரையாடல்

29/07/2024 06:02 PM

சிங்கப்பூர், 29 ஜூலை (பெர்னாமா) --  சமூக ஊடக தளங்களின் உரிமத்தில் கவனம் செலுத்துவது குறித்து சிங்கப்பூரின் இலக்கவியல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோவும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலும் இன்று கலந்துரையாடினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அச்சந்திப்பு, குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணைய சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

சமூக ஊடகங்களின் ஒழுங்குமுறை கட்டமைப்பின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி மலேசியாவில் உள்ள சுமார் எண்பது லட்சம் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடக பயனர்களைக் கொண்டிருக்கும் அனைத்து சமூக ஊடகம் மற்றும் இணைய செய்தி சேவை, அந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூருக்கான மலேசிய தூதர், கைரூல் நஸ்ரான் அப்துல் ரஹ்மான் மற்றும் எம்.சி.எம்.சி அதிகாரிகளும் ஃபஹ்மியுடன் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)