பொது

வான்வெளி நிறுவனமாக உருவெடுக்க மலேசியாவிற்குப் பரிந்துரை

29/07/2024 06:08 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) --  ஆசியான் வட்டாரத்தில் வான்வெளி நிறுவனமாக உருவெடுக்க பிற நாடுகள் மலேசியாவிற்குப் பரிந்துரைத்துள்ளன.

வான்வெளி நிறுவனத்தை உருவாக்குவது இன்னும் திட்டமிடலில் இருந்தாலும், அந்தச் செயற்கைக்கோளை ஏவும் மையமாக உருவாக குறைந்தது ஐந்து அல்லது ஆறு நாடுகள் மலேசியாவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

"அதை நனவாக்குவதை நாங்கள் உறுதிசெய்ய அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்வதற்கு முன்னர் நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சு, நிறுவனத்திடம் கலந்துரையாடவிருக்கிறோம்", என்றார் அவர்.

2023-ஆம் ஆண்டிற்கான லங்காவி அனைத்துலக வான் கடல் கண்காட்சியான LIMA இருபத்து மூன்றின் போது கலந்துரையாடப்பட்டது போன்று வான்வெளி நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பில் செனட்டர் லிம் பெய் ஹென், இன்று மேலவையில் எழுப்பியக் கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)