விளையாட்டு

ஒலிம்பிக்: பூப்பந்து அரங்கில் தேசிய குழுவின் பயணம் தொடர்கிறது

29/07/2024 06:33 PM

பாரிஸ், 29 ஜூலை (பெர்னாமா) --  2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி குறித்த செய்திகள்.

பூப்பந்து விளையாட்டில் குழு நிலையில் வெற்றிப் பெற்றதை அடுத்து, மலேசியாவின் தேசிய குழு மீண்டும் PORTE DE LA CHAPELLE அரங்கில் தனது பயணத்தைத் தொடர்கிறது.

மகளிருக்கான தனிநபர் ஆட்டம் இன்றிரவு நடைபெறும் வேளையில், மாலையில் நடந்து முடிந்த கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள சீனாவின் இணையரை வீழ்த்தி நாட்டின் ச்சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஜோடி அதிரடி படைத்துள்ளது.

70 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் நாட்டின் கலப்பு இரட்டையர் ஜோடி, 17-21, 21-15 மற்றும் 21-16 என்ற நிலையில் வென்று, டி பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.

ஒலிம்பிக் அரங்கில் முதன் முறையாக களமிறங்கி இருக்கும் கோ ஜின் வெய் மகளிர் பிரிவில், இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னிதா ஷால்ட்ஸ் உடன் மோதுகின்றார்.

இதனிடையே A குழுவில் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருந்த ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி, நாளை அதிகாலை சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங்கைச் சந்திக்கவிருக்கின்றனர்.

சீன ஜோடியை எட்டு முறை களத்தில் சந்தித்திருக்கும் மலேசிய இணை, அதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

அதோடு, உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் Aaron ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி, 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)