விளையாட்டு

மன்னிப்பு கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு

29/07/2024 07:53 PM

பாரிஸ், 29 ஜூலை (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது நடந்த சில தவறுகளுக்காக அம்மன்றத்தின் ஏற்பாட்டுக் குழு மன்னிப்புக் கோரி உள்ளது. 

தொடக்க நிகழ்ச்சியில், இடம்பெற்ற ஓர் அங்கம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை  அவமதிப்பதுபோல் அமைந்ததாகக் குறைகூறப்பட்டது.

எவரையும் புண்படுத்தும் நோக்கில் தொடக்கவிழாவில் அந்த அங்கம் சேர்க்கப்படவில்லை என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.

அதோடு, தென் சூடானுக்காக சிறிது நேரம் சூடானின் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது.

அவ்விரண்டும் தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

தவறான தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டதற்கும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வருத்தம் தெரிவித்தது.

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)