பொது

விலங்குகளைத் துன்புறுத்தும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

29/07/2024 07:57 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) --  2021-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை விலங்குகளைத் துன்புறுத்தும் வழக்குகளின் எண்ணிக்கை அபாயகரமான அதிகரிப்பை எட்டியுள்ளதாக, கால்நடை சேவைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

அது தொடர்பாக, இவ்வாண்டில் மட்டுமே சுமார் இரண்டாயிரத்து நூற்று அறுபத்து இரண்டு புகார்கள் பதிவாகியுள்ளது என்று, இன்று தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2021-ஆம் ஆண்டில் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தொண்பது புகார்கள், 2022-ஆம் ஆண்டில் ஆயிரத்து ஐநூற்று எண்பது புகார்கள் உட்பட 2023-ஆம் ஆண்டில் ஈராயிரத்து அறநூற்று இருபத்து இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக சிலாங்கூரில் மூவாயிரத்து முண்ணூற்று முப்பத்து நான்கு புகார்களும் கோலாலம்பூரில் ஆயிரத்து நூற்று பதிமூன்று புகார்களும் பதிவு செய்துள்ளது.

இதனிடையே, 2020-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை பூனைகளைத் தூக்கி எறியப்பட்ட புகார்களையே தங்கள் தரப்பு அதிகம் பெற்றுள்ளதாக, கால்நடை சேவைத் துறை மேலும் கூறியது.

எனவே, விலங்குகளைத் துன்புறுத்தியக் குற்றங்களுக்காக ஒன்பது பேர் சிறையில் உள்ள நிலையில், ஐம்பத்து இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக, கால்நடை சேவைத் துறை உறுதிச் செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)