பொது

நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது அரசாங்கத்தின் தொடர் முயற்சி - பிரதமர்

30/07/2024 05:06 PM

புத்ராஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) --  இதனிடையே, கசிவுகளைத் தவிர்க்க தனிப்பட்ட லாபம் அல்லது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவர்களை ஈடுபடுத்தாமல், நாட்டின் பாதுகாப்பு சொத்துகளின் கொள்முதல் சரியான நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவே அந்த கொள்முதல். ஆனால், அதற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இருப்பினும், கொள்முதல் முறை அதிக கசிவை ஏற்படுத்துகிறது. எனவே, இதை நிறுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில், சுயலாபத்திற்காக நடவடிக்கை எடுப்பது. இந்த நடத்தை நாட்டின் நலன்களைக் கெடுக்கும். அதனால்தான் இந்த விஷயத்தில் நான் கண்டிப்பானவனாக இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்'', என்றார் அவர்.

நாட்டில் பாதுகாப்பு விவகாரங்கள் மக்களால் தீர்மானிக்கப்படுவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியே என்றும் அவர் எடுத்துரைத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தினாலும், பாதுகாப்புப் படைகளில் தேசிய விவகாரங்கள் மற்றும் நிர்வாகத்தின் அம்சங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)