பொது

பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் கலந்து கொள்ள மலேசியர்களுக்கு அழைப்பு

04/08/2024 04:58 PM

கோலாலம்பூர், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --  புக்கிட் ஜாலில், AXIETA ARENA அரங்கில் நடைபெறும் பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் கலந்து கொள்ள அனைத்து மலேசியர்களும், குறிப்பாக கோலாலம்பூர் சுற்றுவட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

இன மத வேறுபாடின்றி பொது மக்கள் அனைவரும் இப்பேரணியில் பங்கேற்கலாம் என்று அதற்கு தலைமை ஏற்கும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.

''கூட்டரசு பிரதேச மக்கள் தயாராகி இன்று மாலை வருவதற்கு நேரம் இருக்கும். எனவே, இந்த இறுதி நேரத்தில் நான் அழைக்கிறேன். மாலை 6 மணிக்கு இந்த அரங்கத்தில் தொழுகை தொடங்கும். அனைத்து இனங்களும், அனைத்து மதங்களும் கலந்து கொள்ளலாம். ஏனெனில் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்கான போராட்டம் மனிதாபிமானப் போராட்டம்'', என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் உள்ள AXIETA ARENA அரங்கில் நடைபெறும் பாலஸ்தீன விடுதலைப் பேரணிக்கான இறுதிக்கட்ட பணிகளைப் பார்வையிட்டப் பின்னர், டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்

AXIETA ARENAவில் நுழைய,வாய்ப்பில்லாத பொதுமக்களுக்கு தேசிய அரங்கு திறக்கப்படுவதோடு அங்கு பெரிய திரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாலை மணி 6 தொடங்கி இரவு மணி 10.30 வரை இப்பேரணி நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)