பொது

SOLAR PANEL வழிகாட்டிகள் அடுத்த ஆண்டுக்குள் தயாராகும்

30/07/2024 05:44 PM

கோலாலம்பூர், 30 ஜூலை (பெர்னாமா) --  நாட்டில் SOLAR PANEL எனப்படும் சூரியஒளி மின்னழுத்தப் பலகையின் கழிவுகளை நிர்வகிப்பதற்கான சிறந்த வழிகாட்டிகள், அடுத்த ஆண்டுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகள் உட்பட அண்மைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அவ்வழிக்காட்டிகள் தயாரிக்கப்படுவதாக இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர்  நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

''ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளைக் கொண்டு இந்த வழிக்காட்டிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இருப்பினும், அந்த கழிவுகளை நிர்வகிப்பதற்கான தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் பரிசீலிக்க இருக்கிறோம். வழிக்காட்டிகளுக்கான செயல்முறைகள் தொடக்கம் கண்டிருக்கும் நிலையில், அடுத்தாண்டுக்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது'', என்றார் அவர்.

இதுவரை, நான்கு வசதிகளை உள்ளடக்கி சிலாங்கூர், பினாங்கில் ஏழு, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரில் தலா இரண்டு உட்பட பேராக் மற்றும் சரவாக்கில் தலா ஒன்று என சூரியஒளி மின்னழுத்தப் பலகையின் கழிவுகளை மீட்கும் 17 வசதிகளுக்குச் சுற்றுச்சூழல் துறை உரிமம் வழங்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)