உலகம்

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு; குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பலி

30/07/2024 06:27 PM

வயநாடு, 30 ஜூலை (பெர்னாமா) -- கேரளா, வயநாடு மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட  60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கேராளாவில் பெய்து வரும் பருவமழையால், இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்.

நிலச்சரிவினால், வயநாடு மாவட்டத்தின் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த துல்லியமாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஒரே நாளில் 300 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மக்கள் உறங்கி கொன்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் தப்பிக்க இயலவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட 70 பேர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜோர்ஜ்  தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)