பொது

அழுகிய நிலையில் சீன மூதாட்டியின் சடலம் மீட்பு

30/07/2024 07:21 PM

சுங்கை பட்டாணி, 30 ஜூலை (பெர்னாமா) -- அழுகிய நிலையிலான வயதான பெண்மணியின் சடலமொன்று இன்று தாமான் ரியா அருகேயுள்ள வீடமைப்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

68 வயதுடைய ஹிம் பி லீ என்ற அம்மாதுவின் சடலம் வீட்டின் முதன்மை அறையில் காலை மணி 10.40 மணியளவில்  மீட்கப்பட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அம்மாதுவின் வீட்டைக் கடந்து மெதுவோட்டம் ஓடும் போது துர்நாற்றம் வீசியதைத் தொடந்து அண்டை வீட்டார் போலீசுக்கு தகவல் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

அம்மாதுவின் வீட்டை அடைந்ததும் வீடு பூட்டியிருந்ததைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரின் துணையோடு கதவு உடைக்கப்பட்டது.

உள்ளே சென்று பார்த்ததும் கட்டிலில் படுத்தபடி அழுகிய நிலையில் அவரின் சடலம் காணப்பட்டதாக வான் அஸாருடின் கூறினார். 

கடந்த ஜூலை 27ஆம் தேதி அம்மாதைக் கடைசியாகப் பார்த்ததாக அண்டை வீட்டார் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)